| 245 | : | _ _ |a கூரம் செப்பேடுகள் - |
| 500 | : | _ _ |a தற்போது அரக்கோணம் அருகில் உள்ள பரமேஸ்வரமங்கலத்தை பொலிவுறு நகராக வடிவமைப்பதற்காக 6300 (98.44 ஏக்கர்) குழி நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்ட து. இந்த நகரை உருவாக்கும் பொறுப்பு உத்தரகாணிகா மகா சேசன் தத்தன் என்ற ஆணத்தியிடம் தரப்பட்டது. பொலிவுறு நகரில் முதலில் பரமேஸ்வர தடாகம் என்ற ஏரி வெட்டப்பட்டது. அதற்கு தேவையான நீர் இருப்புக்காக பாலாற்றில் இருந்து பெரும்பிடுகு என்ற கால்வாய் வெட்டப்பட்டது. இங்கு தண்ணீரைப் பயன்படுத்தும் பகிர்மான உரிமைகள் அனைத்தும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டதால் தண்ணீர் தாவாக்கள் தவிர்க்கப்பட்டன. கட்டுமானங்களுக்குத் தேவையான செங்கற்களை உற்பத்தி செய்வதற்காகவே சூளைமேட்டுப்பட்டி என்ற பகுதி உருவாக்கப்பட்டது. ஆன்மிக திருவிழாக்கள் மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதால் பொலிவுறு நகரில் முதலில் கோயில் எழுப்பப்பட்டது. ஊருக்கு நடுவில், பாரதம் வாசிக்கும் மண்டபம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இது நீதிக் கதைகளைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் இடமாகவும் அரசின் ஆணைகள், சட்டதிட்டங்களை மக்களுக்குச் சொல்லும் ஊடக மையமாகவும் செயல்பட்டன. வணிகர்கள், பொற்கொல்லர்கள், அறிவுசார் பெருமக்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நகரின் முக்கிய பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டது. உலக வணிகர்கள் வர்த்தகம் செய்வதற்கான பாதுகாப்பான வழிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டன. |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a கி.பி. 7-ம் நூற்றாண்டில் காஞ்சியை ஆண்ட முதலாம் பரமேஸ்வர வர்மன் தனது பெயரில் பரமேஸ்வரமங்கலம் என்ற பொலிவுறு நகரை உருவாக்கினான். அப்போது கடைபிடிக்கப்பட்ட நெறிமுறை அலகுகளை கூரம் செப்பேடு விவரிக்கிறது. கூரம் செப்பேடு 7 ஏடுகளை (14 பக்கங்கள்) கொண்டது. |
| 546 | : | _ _ |a தமிழ்-கிரந்தம் |
| 653 | : | _ _ |a கூரம் செப்பேடுகள், பல்லவர், முதலாம் பரமேஸ்வரவர்மப் பல்லவன், பல்லவர் காலச் செப்பேடுகள், பரமேஸ்வரவர்ம மங்கலம் |
| 700 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம் |
| 710 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம் |
| 752 | : | _ _ |a கூரம் |c கூரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 | : | _ _ |a பல்லவர் / முதலாம் பரமேசுவர வர்மன் |
| 906 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 12.9076359 |
| 915 | : | _ _ |a 79.6557365 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00001 |
| barcode | : | TVA_CPS_00001 |
| book category | : | பல்லவர் |
| cover | : |
|
| Primary File | : |